×

திரையுலகம் பற்றி எதுவும் தெரியாது: ஸ்கூல் டேஸ் (கன்னடம்)

 

சென்னை: ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரிக்க, குபேந்திரன் காமாட்சி எழுதி இயக்கியுள்ள படம், ‘மங்கை’. இதில் ‘கயல்’ ஆனந்தி, நடிகர் ஜெயப்பிரகாஷின் மகன் துஷி, ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி நடித்துள்ளனர். எஸ்.ஜே.ஸ்டார் ஒளிப்பதிவு செய்ய, ‘கிடா’ தீசன் இசை அமைத்துள்ளார். கபிலன், யுகபாரதி, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளனர். படம் குறித்து ‘கயல்’ ஆனந்தி கூறியதாவது: 10ம் வகுப்பு படிக்கும்போதே நான் சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது திரையுலகம் பற்றி எதுவும் தெரியாது. இப்போது கூட எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், என்னென்ன கற்றுக்கொள்ள முடியுமோ அதில் கவனம் செலுத்தி வருகிறேன். தயாரிப்பாளர் ஜாஃபர் எங்களுக்கு கிடைத்த வரம். படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க கடுமையாக உழைத்துள்ளார். அதுபோல், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் கார்த்திக்கும் எல்லா வேலைகளையும் சிரமம் பார்க்காமல் செய்வார். எல்லா உதவிகளையும் எல்லோருக்கும் செய்வார்.

The post திரையுலகம் பற்றி எதுவும் தெரியாது: ஸ்கூல் டேஸ் (கன்னடம்) appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,J. ,M Pictures R. ,Zafar Sadiq ,Kubendran Kamatshi ,Kayal 'Anandi ,Jayaprakash ,Tushi ,Shivin ,Rams ,Aditya Kadir ,Kavita Bharati ,S. J. ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...