×

அனுஷ்காவின் லீலாவதி

ஐதராபாத்: திரை உலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை பூர்த்தி செய்ய இருக்கும் அனுஷ்கா தனது 50வது படம் என்ற மைல்கல்லை தற்போது தொட்டு உள்ளார். அவரது 50வது படம் தற்போது உருவாகி வருவதாகவும் இந்த படத்தை இயக்குனர் கிரிஷ் என்பவர் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு அனுஷ்கா நடித்த ’வேதம்’ என்ற தெலுங்கு படத்தை கிரிஷ் இயக்கிய நிலையில் 14 கழித்து மீண்டும் இருவரும் ஒரே படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘லீலாவதி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரிசாவில் நடைபெற்று வருவதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

The post அனுஷ்காவின் லீலாவதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anushka ,Hyderabad ,Krish ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.