×

ஏர்போர்ட், ஜிம், ஓட்டல்களில் நட்சத்திரங்களை போட்டோகிராபர்கள் சூழ்வது எப்படி? போட்டுடைத்த பிரியாமணி

சென்னை: பிரியாமணி இந்தியில் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்துகிறார். ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில், ஏர்போர்ட், ஜிம், ஓட்டல் ஆகிய இடங்களில் பாலிவுட் நடிகைகளை போட்டோக்கள், வீடியோக்கள் எடுப்பது பற்றிய ரகசியத்தை உடைத்துள்ளார். சில நடிகைகள் அவர்கள் செல்லுமிடங்களைப் பற்றி ஏஜென்சிக்களிடம் சொல்லி விடுவார்கள். அவர்கள், புகைப்படக் கலைஞர்களை அந்த நடிகைகள் செல்லுமிடங்களுக்கு போக வைத்து புகைப்படம், வீடியோக்களை எடுக்க வைப்பார்கள்.

அந்த வீடியோக்கள்தான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப்களில் ரீல்ஸ்களாக, ஷாட்ஸ்களாக வெளியாகும். மீடியா மூலம் அவற்றைப் பகிர்ந்து எதேச்சையாக சென்றது போல ‘Spotted’ என தலைப்பிட்டு, ஏர்போர்ட், ஜிம் இடங்களில் நடிகைகள் என சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள் என்று பிரியாமணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, ‘இது புது டிரென்டாகவே தற்போது மாறிவிட்டது. அதற்காக அவர்கள் தரும் விலை அதிகம் என்றோ, குறைவு என்றோ சொல்ல மாட்டேன். அது போல செய்து தர வேண்டுமா என என்னிடமும் கேட்டார்கள். அப்படியான கவனம் எனக்குத் தேவையில்லை என சொல்லிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

The post ஏர்போர்ட், ஜிம், ஓட்டல்களில் நட்சத்திரங்களை போட்டோகிராபர்கள் சூழ்வது எப்படி? போட்டுடைத்த பிரியாமணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Priyamani ,CHENNAI ,Shah Rukh Khan ,Bollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...