×

கங்கனாவின் வீடுகளை வாங்கினார் மிருணாள்

மும்பை: ‘சீதா ராமம்’, ‘ஹை நான்னா’ தெலுங்குப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். அவர் தற்போது மும்பையில் 2 குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த இரண்டு இந்த 2 அபார்ட்மென்ட் குடியிருப்புகளும் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் குடும்பத்தினருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. கங்கனாவின் அப்பா, சகோதரருக்குச் சொந்தமான அந்த குடியிருப்புகளை மிருணாள் தனது பெயரிலும், தனது அப்பா பெயரிலும் வாங்கியிருக்கிறார்.

மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள அதன் விலை 10 கோடி ரூபாய் என்கிறார்கள். அதே குடியிருப்பில் தற்போது மிருணாள் வசித்து வருவதால் மிருணாள் எளிதில் பேச்சுவார்த்தை நடத்தி மற்ற இரண்டு குடியிருப்பையும் வாங்கியிருக்கிறார். கங்கனா கடைசியாக நடித்த 10 படங்கள் படு தோல்வி அடைந்தன. இதனால் சொந்த படங்களை தயாரித்தும் பாதிக்கப்பட்ட கங்கனா, தனது சொத்துகளை விற்று வருகிறார். அதனால்தான் அவர் இந்த இரண்டு வீடுகளையும் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

The post கங்கனாவின் வீடுகளை வாங்கினார் மிருணாள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mrinal ,Kangana ,Mumbai ,Mrinal Tagore ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த...