×

வட இந்தியர்களின் வரவை ஆதரிக்கும் படமா: பாஸ்கர் சக்தி பதில்

 

சென்னை: டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ள படம், ‘வடக்கன்’. பாஸ்கர் சக்தி எழுதி இயக்கியுள்ளார். புதுமுகங்கள் குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, சமீரா, ரமேஷ் வைத்யா, வைரம் பாட்டி நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.ஜே.ஜனனி இசை அமைத்துள்ளார். ரமேஷ் வைத்யா பாடல்கள் எழுதியுள்ளார். படம் குறித்து பாஸ்கர் சக்தி கூறியதாவது: தமிழ்நாட்டில் தற்போது வட இந்திய தொழிலாளர்கள் பணியாற்றாத இடங்களே இல்லை, அவர்கள் பணிபுரியாத சிறுதொழில்கள் மற்றும் வேலைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கிராமப்புறங்கள் வரை அவர்கள் ஊடுருவி இருக்கின்றனர். சமூகத்தில் இதுபற்றிய விவாதங்கள் அன்றாடம் நடந்து வருகின்றன. இச்சம்பவத்தின் பின்னணியில் ‘வடக்கன்’ படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் நாம் பார்க்கும் எளிய மனிதர்களின் பார்வையில், அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான, உணர்ச்சிகரமான சம்பவங்களின் அடிப்படையில் படம் உருவாகியுள்ளது. சமகால விஷயங்களை யதார்த்தமான காமெடியுடன் சொல்லும் படம், வட இந்தியர்களின் வரவை ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா என்பது சஸ்பென்ஸ். ஆனால், முக்கியமான ஒரு விஷயத்துக்கு என்ன தீர்வு என்பதை சொல்கிறோம். அது பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தும். பல்கேரியாவில் பின்னணி இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் லைவ் டப்பிங் செய்யப்பட்டதால், அனைத்து நடிகர், நடிகைகளின் உணர்ச்சிகரமான நடிப்பு ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

The post வட இந்தியர்களின் வரவை ஆதரிக்கும் படமா: பாஸ்கர் சக்தி பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : North Indians ,Bashar Shakti ,Chennai ,Discovery Cinemas ,M.D. ,Vediapan ,Kunkumaraj ,Vairamala ,Parvez Mehru ,Samira ,Ramesh Vaithya ,Vairam Bhatti ,Teni Easwar ,S. J. Janani Music ,Indians ,Bhaskar Shakti ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வடஇந்திய கட்சியான பாஜவுக்கு...