×

மீண்டும் கவுண்டமணியின் டயலாக்தான் டைட்டில்: சந்தானம் தகவல்

சென்னை: ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவிமரியா, சேஷு, கூல் சுரேஷ் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் வெற்றிபெற்றுள்ளது. இதை பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்திருந்தது. சமீபத்தில் நடந்த இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் சந்தானம் பேசியதாவது: நாத்திகரோ, ஆன்மிகவாதியோ, நீங்கள் எப்படி இருந்தாலும் சரி. அதே கண்ணோட்டத்தில் இப்படத்தைப் பார்த்து ரசிக்கலாம். பொதுவான முடிவையே இயக்குனர் வழங்கியுள்ளார். நான் ஆன்மீகவாதி. எல்லா கடவுளையும் கும்பிடுவேன். இன்றைய சூழ்நிலையில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையும் ரொம்ப இறுக்கமாக இருக்கிறது.

அதனால் எப்போதுமே என்னையும், மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள நினைப்பேன். அதைப் பார்த்து எனக்கு புதுப்பட வாய்ப்புகள் வந்தது. சிம்புவும் வாய்ப்பு தந்தார். என் படங்களைப் பார்த்து சந்தோஷமாக சிரித்துவிட்டுப் போகலாம். அதற்கு நான் உத்தரவாதம். காமெடி செய்வது என்றால், மற்றவர்களுக்கும் இடம் அளிக்க வேண்டும்.‌ இல்லாவிட்டால் அந்தக் காமெடியே ஒர்க்கவுட் ஆகாது. ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்று பெயரிட காரணம், அது கவுண்டமணி சாரின் பிரபலமான டயலாக். நானும், கார்த்திக் யோகியும் அவரது ரசிகர்கள் என்பதால் அதை டைட்டிலாக்கி விட்டோம். அடுத்து ஆர்யாவுடன் நான் நடிக்கும் படத்துக்கும் கவுண்டமணி டயலாக்தான் டைட்டில்.

 

The post மீண்டும் கவுண்டமணியின் டயலாக்தான் டைட்டில்: சந்தானம் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags :
× RELATED ஆங்கிலத்தில் உருவாகும் தி டார்க் ஹெவன்