×

பவதாரிணிக்கு இன்று இறுதிச்சடங்கு

 

சென்னை: இலங்கையில் மரணம் அடைந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன் அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்தார். இலங்கையில் கடந்த வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது உடல் நேற்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை, தி.நகரிலுள்ள இளையராஜா வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு உடல் நேற்றிரவு கொண்டு செல்லப்பட்டது. இன்று இறுதிச் சடங்கு நடக்கிறது.

1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ராசய்யா, அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதை, அழகி, பிரண்ட்ஸ், தாமிரபரணி, உளியின் ஓசை, கோவா, மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார். ரேவதி இயக்கிய ‘மித்ர் மை பிரண்ட்’ படத்திற்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.

The post பவதாரிணிக்கு இன்று இறுதிச்சடங்கு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bhavatharini ,CHENNAI ,Ilayaraja ,Bhavatarini ,Sri Lanka ,Bhavadarini ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வரிகள், பாடகர் குரல் சேர்ந்துதான்...