×

ரமலான் சிறப்புகள்

“நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால், ‘நான் நோன்பாளி’ என்று அவர் சொல்லட்டும்.” நபிமொழி

“உங்களில் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் அவர் அந்நாட்களில் நோன்பு நோற்காமல் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோற்றுக் கொள்ள வேண்டும். இறைவன் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்பவில்லை.” (குர்ஆன் 2:185)

“விடியற்காலையில் வெள்ளை நூலையும் கறுப்பு நூலையும் பிரித்தறிய முடியும் வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பிறகு இவற்றையெல்லாம் தவிர்த்து இரவு தொடங்கும்வரை நோன்பை நிறைவுசெய்யுங்கள்.” (குர்ஆன் 2:187)

“இது (இந்தக் குர்ஆன் எத்தகைய வேதம் எனில்) தனக்கு முன்னுள்ள வேதங்களை மெய்ப்படுத்துவதாகவும் நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழி காட்டக்கூடியதாகவும் இருக்கிறது.” (குர்ஆன் 2:97)

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகிறான்;  தன் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின்
காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.” நபிமொழி

“யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை.”

நபிமொழி

Tags :
× RELATED திருநெல்வேலி, உலகம்மை உடனுறை பாபநாச நாதர்