×

5 கோல்டன் குளோப் விருதுகள் வென்ற ஓப்பன்ஹெய்மர்: கிறிஸ்டோபர் நோலனுக்கும் விருது

லாஸ்ஏஞ்சல்ஸ்: கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ ஹாலிவுட் படம், 5 கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. ஹாலிவுட் பாரின் பிரஸ் அசோசியேஷன் சார்பில் நடக்கும் இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நேற்று நடந்தது.

இதில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ஜோ கோய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படத்துக்கு சிறந்த டிராமா படத்துக்கான கோல்டன் குளோப் வழங்கப்பட்டது. கோல்டன் குளோப் விருது பெற்றவர்கள் விவரம்:

சிறந்த திரைப்படம் (டிராமா) – ஓப்பன்ஹெய்மர். சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹெய்மர்). சிறந்த நடிகை (டிராமா) – லிலி கிளாட்ஸ்டோன் (கில்லர்ஸ் ஆப் தி ப்ளவர் மூன்). சிறந்த நடிகர் (டிராமா) – சிலியன் மர்பி (ஓப்பன்ஹெய்மர்). சிறந்த திரைப்படம் (மியூசிக்கல்/ காமெடி) – புவர் திங்ஸ். சிறந்த திரைக்கதை – அனாடமி ஆப் எ பால். சிறந்த நடிகை (மியூசிக்கல்/ காமெடி) – எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்). சிறந்த நடிகர் (மியூசிக்கல்/ காமெடி) – பால் ஜியாமெட்டி (தி ஹோல்டோவர்ஸ்).

சிறந்த துணை நடிகர் – ராபர்ட் டவுனி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்). சிறந்த துணை நடிகை – டாவின் ஜாய் ராண்டால்ப் (தி ஹோல்டோவர்ஸ்). சிறந்த டிவி தொடர் (டிராமா) – சக்ஸசன். சிறந்த டிவி தொடர் (மியூசிக்கல்/ காமெடி) – தி பியர். சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் (இசை) – லுட்விக் யோரன்ஸோன் (ஓப்பன்ஹெய்மர்). சிறந்த படம் (ஆங்கிலம் அல்லாத மொழி) – அனாடமி ஆப் எ பால். சிறந்த பாடல் – ’வாட் வாஸ் ஐ மேட் பார்?’ (பார்பி – பில்லீ எலீஷ்). சிறந்த அனிமேஷன் படம் – ’தி பாய் அண்ட் தி ஹெரோன். சிறந்த வசூல் சாதனை படம் – பார்பி.

The post 5 கோல்டன் குளோப் விருதுகள் வென்ற ஓப்பன்ஹெய்மர்: கிறிஸ்டோபர் நோலனுக்கும் விருது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Oppenheimer ,Christopher Nolan ,Los Angeles ,Hollywood ,Hollywood Bar Press Association ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜப்பானில் வெளியாகும் ஓப்பன்ஹெய்மர்...