×

தூத்துக்குடியில் பிரசாரம் விவசாயிகள், மீனவர்களுடன் எடப்பாடி கலந்துரையாடல்

தூத்துக்குடி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 31ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வந்த அவர், விளாத்திகுளத்தில் பிரசார பயணம் மேற்கொண்டார்.

ஆக.1ம் தேதி காலை கோவில்பட்டியில் பிரசாரம் முடித்து இரவு 9.30 மணி அளவில் தூத்துக்குடி வந்து தங்கினார். அங்கு நேற்று காலை எடப்பாடி பழனிசாமி தொழில் முனைவோர், விவசாயிகள், உப்பு உற்பத்தியாளர்கள், மீனவர்கள், வக்கீல்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி.சண்முகநாதன், கடம்பூர் ராஜு எம்எல்ஏ, சித.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாக எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பின்னர் மதியம் 1 மணியளவில் தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்திற்கு சென்று வழிபட்டார். பங்குதந்தை ஸ்டார்வினிடம் ஆசிபெற்றார். ஆலயம் சார்பில் அவருக்கு பனிமயமாதா உருவபடம் வழங்கப்பட்டது. மதியம் மறவன்மடத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஓய்விற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

The post தூத்துக்குடியில் பிரசாரம் விவசாயிகள், மீனவர்களுடன் எடப்பாடி கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,General Secretary ,Edappadi Palanisami ,Tamil Nadu ,Thoothukudi district ,Vralathigul ,Kovilpatti ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை...