×

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் எம்பி சந்திப்பு: உடல்நலம் விசாரித்தார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் எம்பி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி அரசு பணி, கட்சி பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். அவரை பல்வேறு அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எம்பி நேற்று சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். சந்திப்பின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து கமல்ஹாசன் விசாரித்தார். மேலும் அரசியல் நிலவரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கமல்ஹாசன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் எம்பி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மக்களின் முதல்வர் அன்பு நண்பர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவர் புத்துணர்ச்சியோடு மக்கள் பணிக்கு திரும்பியதில் பெருமகிழ்ச்சி, ஆனந்தமான இந்த உரையாடலின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தது கூடுதல் மகிழ்ச்சி’ என்று கூறி உள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் எம்பி சந்திப்பு: உடல்நலம் விசாரித்தார் appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை...