×

கிறிஸ்தவ போதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சிக்கல்: குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: கிறிஸ்தவ போதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியம் உள்ளிட்டோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்துக்குச் சென்ற இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்ப்ரே நோபிள் என்பவரை, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாக, ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து மேற்கண்ட வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும், ஞானதிரவியம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், ‘‘போதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய முடியாது. அதேப்போன்று வழக்கிலிருந்து விடுவிக்கவும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரும் மனுக்களை திருநெல்வேலி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதியளித்த உச்ச நீதிமன்றம், ஞானதிரவியத்தின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

The post கிறிஸ்தவ போதகர் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சிக்கல்: குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Gnanadriviyam ,Supreme Court ,New Delhi ,Itteri ,Godfrey ,Palayankottai CSI Thirumandala ,Tirunelveli ,Former ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...