- தேசிய விருதுகள் குழு
- கேரளா
- முதல் அமைச்சர்
- பினராயி விஜயன்
- திருவனந்தபுரம்
- 71வது தேசிய திரைப்பட விருதுகள்
திருவனந்தபுரம்: 71வது தேசிய சினிமா விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு சிறந்த இயக்குனர் மற்றும் கேமராமேன் விருது கிடைத்துள்ளது. இந்த படத்தை வெளியிடுவதற்கு ஏற்கனவே கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மலையாள படங்களுக்கு தேசிய விருது கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. விருது பெற்ற கலைஞர்களை நான் பாராட்டுகிறேன். ஆனால் பொய்களால் புனையப்பட்ட தி கேரளா ஸ்டோரி படத்திற்கு விருது வழங்கப்பட்டதில் சங்பரிவாரின் அஜெண்டா இருக்கிறது. கேரளாவை அவமானப்படுத்துவதற்கும், மதவாதத்தை பரப்புவதற்கும் தான் இந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மத ஒற்றுமைக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும் செயல்பட்ட இந்திய திரைப்படத்தின் பாரம்பரியத்தை தேசிய விருது குழு சிதைத்து விட்டது. ஒவ்வொரு மலையாளியும், இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். மதவாதத்தை வளர்ப்பதற்காக கலையை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post தி கேரளா ஸ்டோரி படத்திற்கு விருதா? தேசிய விருதுக்குழு கேரளாவை அவமதித்துள்ளது: கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து appeared first on Dinakaran.
