×

மோடியின் கைப்பாவை தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி3: டெல்லியில் நடந்த காங்கிரஸ் சட்ட மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:2024 தேர்தலில் பாஜ 400 இடங்களில் வென்றிருந்தால், அவர்கள் அரசியலமைப்பை மாற்றியிருப்பார்கள். ஆனால் மக்கள் அவர்களுக்கு சரியான அடி கொடுத்தனர். இது காங்கிரசின் சாதனை. அதற்கான பெருமை ராகுல் காந்தியை சேரும். அவர் அரசியலமைப்பை காப்பாற்ற பிரசாரத்தை தொடங்கினார்.

மகாராஷ்டிரா, கர்நாடகாவில் நடந்த தேர்தல் முறைகேடுகள் குறித்து இப்போது எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் ஒரு சிறிய அறையில் ஒன்பது வாக்காளர்களும், ஒரு விடுதியில் ஒன்பதாயிரம் வாக்காளர்களும் எப்படி இருக்க முடியும்? நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தேர்தல் ஆணையமா அல்லது மோடியின் கைப்பாவையா? இவ்வாறு அவர் பேசினார்.

The post மோடியின் கைப்பாவை தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Election Commission ,Kharge ,New Delhi3 ,Congress ,Delhi ,Mallikarjun Kharge ,BJP ,2024 elections ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை...