×

மேகி சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்

1 பாக்கெட் மேகி நூடுல்ஸ்

1/2டம்ளர் பால்

100கிராம் வெல்லம்

1/2மூடி தேங்காய் துருவல்

10 முந்திரி

10 காய்ந்த திராட்சை

2 ஏலக்காய்

11/2டம்ளர் தண்ணீர்

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்.முதலில் மேகி நூடுல்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும். வேகும் போது கிண்டி கொண்டு இருக்கவும். இல்லையென்றால் பாத்திரத்தில் அடி பிடிக்கும். நூடுல்ஸ் வெந்ததும், பால் சேர்த்து வேகவிடவும். பொங்கல் பொங்கி வழிந்தும், வெல்லத்தை துருவி சேர்த்து வேக விடவும். வெல்லம் கரைந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து வேகவிடவும்.பின் தனியாக ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து கொள்ளவும். வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து, ஏலக்காய் சேர்த்து கலந்து விடவும். வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து, ஏலக்காய் சேர்த்து கலந்து விடவும்.

Tags :
× RELATED ப்ரோக்கோலி சூப்