தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை – ¼ கிலோ,
பச்சை மிளகாய் – 4,
சீரகம் – 1 டீஸ்பூன்,
அரிசி மாவு – 3 டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிது,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
இஞ்சி – ஒரு துண்டு,
நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – ¼ கிலோ,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கொண்டைக் கடலையை 8 முதல் 10 மணி நேரம் ஊறவிட்டு வடிக்கவும். அதனுடன் உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக அரைத்து எடுக்கவும். அதனுடன் அரிசி மாவு, நெய், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவுக் கலவையை சிறிய வடைகளாக தட்டிப் போட்டு, இருபுறமும் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.
