×

தேங்காய்ப்பால் பணியாரம்

தேவையானவை:

ரவை – 150 கிராம்,
தேங்காய்ப்பால், பொடித்த சர்க்கரை – தலா ½ கப்,
ஏலக்காய் – 4, சோடா
உப்பு – சிட்டிகை,
சாதாரண உப்பு – தேவைக்கு,
பொரிக்க நெய் (அ) எண்ணெய் – 200 கிராம்.

செய்முறை:

ரவையை தேங்காய்ப் பாலில் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் போடவும். அதனுடன் ஏலக்காய் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த மாவில் சர்க்கரை, சாதா உப்பு, சோடா உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். அரை மணி நேரம் கழித்து அந்த மாவில் சூடான நெய் அல்லது எண்ணெய் கலவையை ஒரு குழிக்கரண்டி ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.

Tags :
× RELATED சன்னா வடை