×

நாமக்கல் பெண்களின் சிறுநீரகம் விற்பனை; திருச்சி தனியார் மருத்துவமனையில் விசாரணை

திருச்சி, ஜூலை 20: நாமக்கல் மாவட்டத்தில் பெண்களின் சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி தில்லை நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறையினர் நேற்றுமுன்தினம் விசாரணை மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இரண்டு பெண்களிடம் சிறுநீரகங்களைப் பெற்று லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறையினர் விசாரணை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருச்சி மற்றும் பெரம்பலூரில் வைத்து சிறுநீரகங்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாக அப்பெண்கள் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை உறுப்பு மாற்று ஆணையத்தைச் சேர்ந்த இணை இயக்குநர் தலைமையிலான 3 அதிகாரிகள், திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் கோபிநாத் உள்ளிட்டோர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திருச்சி தில்லை நகரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்றுமுன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரனை நடத்தினர்.

The post நாமக்கல் பெண்களின் சிறுநீரகம் விற்பனை; திருச்சி தனியார் மருத்துவமனையில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Trichy ,Trichchi ,Trichy Dilla ,Namakkal district ,Trichy Private Hospital ,Dinakaran ,
× RELATED சோமரசம்பேட்டையில் என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி பரப்புரை