×

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணை கட்டும் பணி துவங்கியது: சீனா அதிரடி

பீஜிங்: திபெத்தில் உருவாகும் யார்லுங் சாங்போ நதி இந்தியாவிற்குள் பாயும் போது பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. இந்த நதி திபெத்தை விட்டு தெற்கே இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் இறுதியாக வங்காளதேசத்திலும் பாய்கின்றது. இந்த யார்லுங் சாங்போ நதியைத் தடுத்து மிகப்பெரிய அணையை கட்ட பல ஆண்டுகளாக சீனா முயற்சித்து வந்தது. இந்த அணை கட்டப்பட்டால் இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் உலகின் மிக பெரிய அணையை கட்டும் பணிக்கான தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் சீன பிரதமர் லி கியாங் கலந்து கொண்டார்.

The post பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணை கட்டும் பணி துவங்கியது: சீனா அதிரடி appeared first on Dinakaran.

Tags : Brahmaputra river ,China ,Beijing ,Yarlung Tsangpo river ,Tibet ,Brahmaputra ,India ,Arunachal Pradesh ,Assam ,Bangladesh ,Yarlung Tsangpo river… ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்