×

பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்

சென்னை: பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், தொழுவூரில் சபரிநகர் மனை பிரிவுக்கு சாலை வசதி அமைத்து தர உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மக்களுக்காக பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில் சாலை அமைக்க அனுமதிக்க முடியாது என்று பி.டி.ஓ. கூறியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட நிலையில், மாவட்ட ஆட்சியரின் முடிவு குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,iCourt ,Chennai ,Chennai High Court ,Sabarnagar Land Division ,Thiruvallur district, ,Ayuvur district ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...