×

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள தியான மண்டபத்தை திறக்க உத்தரவிடக் கோரிய மனு குறித்து மீனாட்சி அம்மன் கோவில், இணை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனுவில் கூறியதாவது; பக்தர்கள் தொன்றுதொட்டு தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். சில ஆண்டுகளாக மரம், இரும்பு கம்பிகளை வைத்து தியானம் செய்ய முடியாத வகையில் பூட்டி வைத்துள்ளனர். மேலும் பக்தர்கள் தியான மண்டபத்தில் தியானம் செய்ய அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் கூறி வருகிறது. தியான மண்டபத்தினுள் அமர்ந்து தியானம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshi Amman Temple Administration ,Court ,Madurai ,High Court ,Meenakshi Amman Temple ,Meenakshi ,Amman ,Temple ,Dinakaran ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...