×

தா.பழூர் சிவாலயத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

தா.பழூர், ஜூலை 18: தா.பழூர் விசாலாட்சி அம்பாள் உடனுறைகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கால பைரவருக்கு பால், தயிர், நெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, அருகம்புல் பொடி, கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

காலபைரவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வணங்கினர். பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிவாச்சாரியார் மற்றும் அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில் வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

The post தா.பழூர் சிவாலயத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Tha.Pazhur Shiva Temple ,Theipirai ,Ashtami ,Tha.Pazhur ,Kala Bhairava ,Ambal Udanuraikasi Vishwanatha Swamy Temple ,Theipirai Ashtami ,
× RELATED மார்கழி பிறப்பு, பொங்கல் பண்டிகை...