×

தியாகி நாகப்பப் படையாச்சியாருக்கு சிலை முதல்வர் அறிவிப்புக்கு பொன்குமார் நன்றி

சென்னை: சமூகநீதி சத்திரியர் பேரவை தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய விடுதலைக்கு காரணமான சத்தியாக்கிரகப் போராட்டத்தை காந்தியடிகள் வடிவமைத்து அதை முதன் முதலில் செயல்படுத்தியது தென்னாப்பிரிக்கா நாட்டில்தான். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் முதலில் களப் பலியானவர் நாகப்பன் படையாச்சி.

காந்தியடிகளுக்கு இந்திய விடுதலை போராட்டத்தில் ஊக்கமளித்த தியாகி நாகப்பப் படையாச்சியாருக்கு மயிலாடுதுறையில் முழு உருவ வெண்கல சிலையை அமைக்க வேண்டும் எனவும், மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திற்கு நாகப்பட்டாச்சியார் பெயர் சூட்ட வேண்டும். நாகப்பப் படையாச்சியாருடைய வரலாற்றை அடுத்த தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தில் அவருடைய வரலாறு இடம்பெற செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் முதல்வரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தினோம். அதன் அடிப்படையில் இன்றைக்கு அவருக்கு முழு உருவ சில அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளது பாராட்டுதலுக்கும், வரவேற்புக்கும் உரியதாகும். முதல்வருக்கு சமூகநீதி சத்திரியர் பேரவை நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

The post தியாகி நாகப்பப் படையாச்சியாருக்கு சிலை முதல்வர் அறிவிப்புக்கு பொன்குமார் நன்றி appeared first on Dinakaran.

Tags : Ponkumar ,Chief Minister ,Nagappa Padayachiyar ,Chennai ,Justice ,Kshatriyar Peravai ,President ,South Africa ,Gandhiji ,Satyagraha movement ,India ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...