×

ஏழைத்தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி எடுப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: ஏழைத்தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி எடுப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் ஏழைத்தொழிலாளர்களை குறிவைத்து அவர்களின் வறுமையை பயன்படுத்தி வெறும் 3 லட்சத்திற்கு அவர்களின் கிட்னி எடுப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இக் கொடூரச்செயலில் ஈடுபடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

ஏழை மக்களின் உடல் உறுப்புகளை விற்பனைக்கான பொருளாக பயன்படுத்துவது மனித உரிமையை முற்றிலும் இழிவுப்படுத்தும் செயல். இன்றைய சமூகத்தில் சில மனித உறுப்புகள், குறிப்பாக ‘கிட்னி’, ஒரு வியாபாரப் பொருளாக மாறிவிட்டது என்பது வருத்தத்துக்குரியது. சட்டப்படி தானம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்க, சிலர் அதனைத் தாண்டி, லாப நோக்கத்தோடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றமாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஏழைத்தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி எடுப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது: செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Selvapperundhagai ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,X ,Namakkal district ,Pallipalayam ,Kumarapalayam ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...