×

மிளகு ஸ்பிரே அடித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை: ஐதராபாத்தில் பரபரப்பு

திருமலை: மிளகு ஸ்பிரே அடித்து சிபிஐ கட்சி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டையைச் சேர்ந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கவுன்சில் உறுப்பினர் சந்து நாயக். தற்போது ஐதராபாத் மலக்பேட்டையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் ஷாலிவாஹனநகரில் உள்ள பூங்காவிற்கு சந்து நாயக் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சந்து நாயக் மீது மிளகு ஸ்பிரே அடித்து, அவர்கள் மறைத்து வைத்திருந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் சந்து நாயக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post மிளகு ஸ்பிரே அடித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை: ஐதராபாத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Communist ,Hyderabad ,Tirumala ,CPI party ,Chandu Nayak ,State Council of the Communist Party of India ,Achampet, Nagarkurnool district, Telangana ,Malakpet, Hyderabad ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...