×

அதிமுக-பாஜ அமைத்துள்ள கூட்டணி தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைப்பதற்கான சதி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க திமுகவில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது, “அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது.

அதேசமயம் அதிமுக- பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல; தமிழ்நாட்டை-தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்” என்று தெளிவாக எடுத்துச் சொல்லி ஓரணியில் தமிழ்நாடு என இணைகின்றனர் தமிழ்நாட்டு மக்கள். இந்த முன்னெடுப்பைக் கண்காணிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் திமுக ஐடி விங் அமைத்துள்ள வார் ரூமை திறந்து வைத்தேன்.

விறுவிறுவென நடைபெற்று வரும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக, கரூர் மாவட்ட கழகத்தினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர். அவர்களை முந்தும் வகையில் பிற மாவட்டக் கழகத்தினரும் மும்முரம் காட்டிடக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post அதிமுக-பாஜ அமைத்துள்ள கூட்டணி தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைப்பதற்கான சதி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : ADAMUGA-BAJA ,TAMIL NADU ,MUHAMMAD K. Stalin ,Chennai ,Dimuka Talawar Mu. K. Stalin ,Dravitha ,Tamil ,Nadu ,Manam Kaka Tammuga ,Atimuga ,Baja ,Chief Minister ,Mu. K. Stalin ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...