×

பணிகள் தொய்வின்றி நடைபெற தமிழ் வளர்ச்சி கழகத்திற்கு ரூ.2.15 கோடி வைப்புத்தொகை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைப்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறையின் 2025-26ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் “தமிழ் வளர்ச்சிக் கழகம் தொய்வின்றி செயற்பட ரூ.2 கோடி வைப்புத் தொகை வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. இதைசெயல்படுத்திட, தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடர்ந்து தொய்வின்றி செயல்பட்டு தமிழ் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையிலும் ரூ.2 கோடி வைப்புநிதியாக வைத்து அதிலிருந்து வரும் வட்டித்தொகையை மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ் வளர்ச்சிக் கழகம் பயன்படுத்திக் கொள்ள, ரூ.2 கோடியே 15 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி கழகத் தலைவர் ராசேந்திரனிடம் வழங்கினார். நிகழ்வின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் (ஓய்வு), தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post பணிகள் தொய்வின்றி நடைபெற தமிழ் வளர்ச்சி கழகத்திற்கு ரூ.2.15 கோடி வைப்புத்தொகை appeared first on Dinakaran.

Tags : Tamil Development Corporation ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Tamil Nadu Legislative Assembly ,Tamil Development Department ,Minister ,Tamil Development and Information ,Dinakaran ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...