×

உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படும்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி

வாஷிங்டன்: ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த டிரம்ப்;

உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிக்கப்படும். அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். உக்ரைன் தற்போது கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால், தற்காப்புக்கு நாங்கள் இன்னும் அதிகமான ஆயுதங்களை அனுப்ப வேண்டும். கடும் தாக்குதல்கள் எதிரொலியாக உக்ரைனில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். ரஷிய அதிபர் புதினின் செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், உக்ரைனுக்கு 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்க உறுதி அளித்திருந்தார். அதேநேரத்தில், டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஜனவரியில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து உக்ரைனுக்கான ராணுவ உதவிகள் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. அதேநேரத்தில், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும். என கடந்த வாரம் மாளிகை அறிவித்தது. இந்நிலையில், உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அளிக்க டிரம்ப் முன்வந்துள்ளார்.

The post உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படும்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி appeared first on Dinakaran.

Tags : Ukraine ,US ,President Donald Trump ,Washington ,Russia ,President Trump ,White House ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்