- எங்களுக்கு
- அதிபர் டிரம்ப்
- நெதன்யாகு
- இஸ்ரேல்
- வாஷிங்டன்
- பெஞ்சமின் நேடன்யாகு
- டிரம்ப்
- ஐக்கிய மாநிலங்கள்
- அமெரிக்க அதிபர் டிரம்ப்
- தின மலர்
வாஷிங்டன் : அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைத்து தேர்வுக் குழுவுக்கு நெதன்யாகு கடிதம் அனுப்பியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். இதையடுத்து நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு வெள்ளி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நோபல் பரிசு தேர்வுக் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை இரவு விருந்தின்போது டிரம்ப்பிடம் வழங்கினார்.
மேலும் அவர், “திரு. ஜனாதிபதி அவர்களே, நோபல் பரிசுக் குழுவிற்கு நான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது. நீங்கள் அதைப் பெற வேண்டும்” என்று கூறினார். ஏற்கனவே அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு வழங்க பாக். ராணுவ தளபதி பரிந்துரைத்திருந்தார். இதற்கு பரிசாக, அவருக்கு வெள்ளை மாளிகையில் டிரம்ப் விருந்து கொடுத்தார். ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் கூறியிருந்தார்.
The post அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு! appeared first on Dinakaran.
