×

பந்தலூர் ஆனைப்பள்ளம் பகுதியில் பல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி

பந்தலூர் : பந்தலூர் அருகே குறிஞ்சிநகர் பகுதியில் இருந்து பெரிய ஆனைப்பள்ளம் டேன்டீ செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பள்ளி குறிஞ்சிநகர் ஏழு கோவில் அருகே இருந்து பெரிய ஆனைப்பள்ளம் டேன்டீ செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.

தற்போது மழை காலம் என்பதால் குண்டும் குழியுமான இடங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது அதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிறமப்படுகின்றனர்.

இப்பகுதியில் டேன்டீ தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதியின் சாலை பழுதடைந்து காணப்படுவதால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர் ஆனைப்பள்ளம் பகுதியில் பல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Pallankuzhi road ,Anaipallam ,Pandalur ,Kurinjinagar ,Periya Anaipallam Dandi ,Kolappally Kurinjinagar ,Cherangode panchayat ,Nilgiris district… ,Dinakaran ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து