×

சூதாடிய 10 பேர் கைது

 

திருப்பூர், ஜூலை 8: திருப்பூர், மங்கலத்தில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படிபோலீசார் ரோந்து சென்றர். அப்போது, எம்.செட்டிபாளையம், மதுரைவீரன் கோவிலில் சிலர் கூட்டமாக அமர்ந்திருந்தனர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (45), நாகராஜ் (30), மருதாசலம் (49), முருகேசன் (39) ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து ரூ.1010 பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று செந்தில் சைசிங் பகுதியில் சூதாடிய பழனிசாமி (50), ஹரிஹரன் (53), முத்து (45), முத்தையா (42), செந்தில்குமார் (34), முத்து (39) ஆகியோரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.700 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

The post சூதாடிய 10 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Mangalam, Tiruppur ,Madurai ,Veeran ,Temple ,M. Chettipalayam ,Duraisamy ,
× RELATED இ-சேவை மையத்தில் லேப்டாப் திருடியவர் கைது