×

அமெரிக்காவில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டு 3 பேர் பலி

பிலடெல்பியா: அமெரிக்காவின் பிலடெல்பியாவில் சாலையில் சென்றவர்கள் மீது வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலியானார்கள். தெற்கு பிலடெல்பியாவின் குடியிருப்பு பகுதியான கிரேஸ் பெர்ரி என்ற இடத்தில் அதிகாலையில் துப்பாக்கிசூடு நடந்துள்ளது. இதில் 3 பேர் பலியானார்கள். 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிலடெல்பியா போலீஸ் கமிஷனர் கெவின் பெத்தேல், இந்த துப்பாக்கி சூடு சம்மந்தமாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்றார். ஆனால் அவர் யார், எதற்காக சுட்டார் என்பதற்கான தகவல் எதுவும் அவர் தெரிவிக்கவில்லை.

The post அமெரிக்காவில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டு 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்