×

மும்மொழி எதற்கு? செம்மொழியை தூக்கிப்பிடியுங்கள்: அமைச்சர் வேண்டுகோள்

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தனியார் பள்ளிகள் மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணியாற்றும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. 3565 தமிழாசிரியர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது. இந்த புத்தாக்கப் பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்துப் பேசியதாவது: தமிழ் மொழியை நாம் உயர்த்திப் பிடித்தே ஆகவேண்டும். அந்த மொழி இல்லாமல் போய்விட்டால் நாம் நமது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை இழந்துவிடுவோம்.

5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பைத் தமிழன் பயன்படுத்தி இருக்கிறான் என்ற பெருமையை நாம் பார்த்திருக்கிறோம். பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பு நமது தமிழ் மொழி எப்படி இருந்தது என்பதற்கு சான்றாக கீழடி, கொற்கை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உணர்த்துகின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 8ல் உள்ள 22 மொழிகளையும் படிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் நமக்கு செல்போன் முக்கியமாகத் தோன்றுகிறது. செல்போனை நாம் உயர்த்திப் பிடிக்கும் நாம் செம்மொழியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

The post மும்மொழி எதற்கு? செம்மொழியை தூக்கிப்பிடியுங்கள்: அமைச்சர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,School Education Department ,Anna Centenary Library ,Kotturpuram, Chennai ,School Education Department… ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்