×

அமெரிக்காவுடன் மோதுவதற்கான அமைப்பல்ல பிரிக்ஸ்: சீன அதிகாரி பேட்டி

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் மோதலை விரும்பும் அமைப்பல்ல பிரிக்ஸ் என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ கிங் விளக்கம் அளித்துள்ளார். சீன அதிகாரி அளித்த பேட்டியில் கூறியதாவது; பல நாடுகளை உள்ளடக்கிய, ஒத்துழைப்புடன் கூடிய வளர்ச்சிக்கான அமைப்புதான் பிரிக்ஸ். வர்த்தகம் மற்றும் வரி விதிப்புச் சண்டையில் யாருக்கும் வெற்றி கிடைக்காது. வளர்ந்து வரும் சந்தைகளைக் கொண்ட வளரும் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கான தளமே பிரிக்ஸ். எந்த ஒரு நாட்டையும் குறிவைத்தோ மோதலில் ஈடுபடும் நோக்கத்திலோ பிரிக்ஸ் உருவாக்கப்படவில்லை என பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறிய நிலையில் சீனா விளக்கமளித்துள்ளது.

The post அமெரிக்காவுடன் மோதுவதற்கான அமைப்பல்ல பிரிக்ஸ்: சீன அதிகாரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : BRIX ,United States ,Washington ,Mao King ,BRICS ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்