- ஈரோடு
- உப்புகினாரு சாலை
- சித்தகடி வீதி
- அங்கபா சாலை
- வெங்கடேஸ்வரா ரோட்
- 43வது வார்டு
- ஈரோடு நகராட்சி
- பூமி பூஜை
ஈரோடு, ஜூன் 20: ஈரோடு மாநகராட்சி 43வது வார்டுக்குட்பட்ட உப்புக்கிணறு வீதி, சீதகாதி வீதி, அங்கப்பா வீதி, வெங்கடேஸ்வர வீதி உள்ளிட்ட 11 வீதிகளில் சாலை பழுதடைந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.இதனையடுத்து, அப்பகுதிகளில் கான்கிரீட் சாலைகள் அமைத்து தர வேண்டும் என 43வது வார்டு கவுன்சிலர் சுபுராமா, மாநகராட்சி கூட்டங்களில் வலியுறுத்தினார்.
இதையடுத்து மாநகராட்சி ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கியது.கான்கிரீட் சாலை அமைப்பதற்கான துவக்க விழா நேற்று நடைபெற்றது.விழாவிற்கு, கவுன்சிலர் சபுராமா ஜாபர் சாதிக் தலைமை வகித்தார். இதில், வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ, மேயர் நாகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணியை துவங்கி வைத்தனர். இதில், 4வது மண்டல தலைவர் குறிஞ்சி தண்டபாணி, 4வது மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜாபர் சாதிக்,திமுக பகுதி கழக செயலாளர்கள் தண்டபாணி,ராமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post காங்கிரீட் சாலைக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.