×

ரீல்ஸ் ஆசையில் பாம்புடன் விளையாட்டு விவசாயி மருத்துவமனையில் அட்மிட்

மொரதாபாத்: உபி மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹய்பத்பூர் கிராமத்தில் ஒரு வீட்டின் சுவரில் பாம்பு இருந்துள்ளது. இதை பார்த்த மக்கள் பீதியடைந்தனர். இதை கேள்விப்பட்ட விவசாயியான ஜிதேந்திர குமார்(50) விரைந்து சென்று அந்த பாம்பை லாவகமாக பிடித்துள்ளார்.அப்போது போதையில் இருந்த ஜிதேந்திரா கையில் பாம்பை வைத்து கொண்டு விளையாட்டு காட்டியுள்ளார். இதை வேடிக்கை பார்க்க வந்தவர்கள், ரீல்ஸ் போடலாம் என்ற கூறி செல்போனில் அதை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த பாம்பை கழுத்தில் சுற்றி அதற்கு முத்தம் கொடுப்பதற்காக தனது வாயின் அருகே கொண்டு வந்துள்ளார். அப்போது பாப்பு நாக்கை கடித்துள்ளது. மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

The post ரீல்ஸ் ஆசையில் பாம்புடன் விளையாட்டு விவசாயி மருத்துவமனையில் அட்மிட் appeared first on Dinakaran.

Tags : Haibatpur ,Amroha district ,UP ,Jitendra Kumar ,
× RELATED 2026ல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!