- கூட்டுறவுத் தொழிலாளர் சங்கக் கூட்டம்
- திருப்பூர்
- மாவட்ட கூட்டுறவு
- யூனியன்
- சிஐடியு
- குழு
- மாவட்ட சி.ஐ.டி.யூ.
- Gauthaman
- திருப்பூர் மாவட்டம்
- தின மலர்
திருப்பூர், ஜூன் 14: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் (சிஐடியு) நிர்வாக குழு கூட்டம், திருப்பூர் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்டத்தலைவர் கௌதமன் தலைமை தாங்கி பேசினார். இதில் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் (வளர்மதி) பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாக 1ம் தேதி சம்பளம் வழங்க வேண்டும்.
ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் தரமானதாகவும், சரியான எடை அளவுகளில் அனுப்பப்படுவதை கூட்டுறவுத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்பட்டன. மாவட்ட செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் கருப்புசாமி, கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post கூட்டுறவு பணியாளர் சங்க கூட்டம் appeared first on Dinakaran.