×

மெட்ரோ பாலம் கட்டுமான பணியின்போது விபத்து: உயிரிழந்தவருக்கு மெட்ரோ ரூ.5 லட்சம், எல் அண்ட் டி ரூ.20 லட்சம் இழப்பீடு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவருக்கு எல் அண்ட் டி ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கி உள்ளது. மெட்ரோ ரயில் பாலப் பணியின் போது இணைப்பு தூண்கள் விழுந்து ரமேஷ் (43) என்பவர் உயிரிழந்தார். பாலத்தை இணைக்கும் தூண்களை பொருத்த முயன்றபோது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

நாகர்கோவிலை சேர்ந்த ரமேஷ் குடும்பத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஏற்கனவே ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. ரமேஷ் குடும்பத்துக்கு ஒப்பந்த நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கியது. மெட்ரோ ரயில் கட்டுமானம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post மெட்ரோ பாலம் கட்டுமான பணியின்போது விபத்து: உயிரிழந்தவருக்கு மெட்ரோ ரூ.5 லட்சம், எல் அண்ட் டி ரூ.20 லட்சம் இழப்பீடு appeared first on Dinakaran.

Tags : Metro bridge ,Metro ,L&T ,Chennai ,Chennai Metro Rail Bridge ,Ramesh ,Metro Rail Bridge ,Dinakaran ,
× RELATED ஆதி திராவிடர் நலத்துறை அரசு...