×

இந்திய மாணவர் சங்கத்தினர் ஊர்வலம்

நாமக்கல், ஜூன் 13: நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம், மாநில கல்வி உரிமையை பாதுகாப்போம் என்ற கருத்தினை வலியுறுத்தி நேற்று ஊர்வலம் நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலை எம்ஜிஆர் வளைவு அருகில் துவங்கிய ஊர்வலம் பொய்யேரிக்கரையில் முடிவடைந்தது. அங்கு மாநில சிறப்பு பேரவை கூட்டம் மாநில தலைவர் சம்சீர் அகமது தலைமையில் நடைபெற்றது. மாநில இணை செயலாளர் மோகன் வரவேற்றார். முன்னதாக அகில இந்திய தலைவர் ஷானு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அகில இந்திய துணைத்ுதலைவர் ஷாஜி, மாநில செயலாளர் அரவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post இந்திய மாணவர் சங்கத்தினர் ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Indian Students Union ,Namakkal ,MGR ,Namakkal Park Road… ,Dinakaran ,
× RELATED 12 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்