- ஜமாபந்தி
- வடக்கு தாலுகா அலுவலகம்
- திருப்பூர்
- திருப்பூர் மாவட்டம்
- திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம்
- சிறப்பு உதவி கலெக்டர்
- சமூக பாதுகாப்பு திட்டம்
- பக்தவச்சலம்
- வடக்கு தாசில்தார்
- காத்தர்வேல்
- தாசில்தார்கள்…
திருப்பூர், மே 21: திருப்பூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. அதன்படி, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவச்சலம் தலைமை தாங்கினார். வடக்கு தாசில்தார் கதிர்வேல் முன்னிலை வகித்தார். இதில், தாசில்தார்கள் உஷா ராணி மற்றும் பாண்டீஸ்வரி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 39 பேர் மனுக்கள் அளித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
The post வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் 39 பேர் மனு appeared first on Dinakaran.
