×

செல்லப்பம்பாளையத்தில் சாலையை சீரமைக்க எம்பியிடம் மனு

 

உடுமலை, ஜன. 6: உடுமலை அருகே உள்ள செல்லப்பம்பாளையம் கிராம மக்கள் சார்பில், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
செல்லப்பம்பாளையம் கிராமத்தின் மேற்கு பகுதியில் கோயில்ராஜ் மளிகை கடையில் இருந்து தெற்கே ஆனைமலை, தேவனூர்புதூர் செல்லும் இணைப்பு சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனை புதுப்பிக்க வேண்டி அரசு துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், உடனடியாக சாலையை சீரமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : Chellappampalayam ,Udumalai ,Pollachi ,Eeswarasamy ,Koilraj ,Anaimalai ,Devanurputhur… ,
× RELATED இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்