×

கோத்தகிரியில் 1 மணி நேரம் பெய்த கனமழை

கோத்தகிரி, மே 21: நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கோத்தகிரியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலநிலையில் மாற்றம் ஏற்ப்பட்டு வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. குறிப்பாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரவேனு,கட்டபெட்டு, கைக்காட்டி, கீழ் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மழையின் தாக்கத்தால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் காலநிலை நிலவியது. மேலும் கோடைக்காலத்தில் மழை பெய்து வருவதால் மலைக்காய்கறிகள் மற்றும் தேயிலை தோட்ட விவசாயிகள் அதிக மகசூல் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கோத்தகிரியில் 1 மணி நேரம் பெய்த கனமழை appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Meteorological Department ,Nilgiris ,Dinakaran ,
× RELATED ஹைபீல்டு சாலையில் சாலையோரத்தில் வெட்டப்பட்ட மரங்களை அகற்ற கோரிக்கை