- சின்னமனூர்
- உத்தம்பாளையம் மாநில நெடுஞ்சாலை
- காமாட்சிபுரம்
- வெங்கடாசலபுரம்
- உத்தம்பாளையம் மாநில நெடுஞ்சாலைத் துறை
- முத்துலபுரம்
- எரசகநாயக்கனூர்
- சீப்பாலக்கோட்டை சாலை
- அழகாபுரி…
- தின மலர்
சின்னமனூர், மே 16: சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் வெங்கடாசலபுரம் வரை உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கத்திற்கான பணிகளை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலைதுறையினர் சின்னமனூர் முத்துலாபுரம் எரசக்கநாயக்கனூர், சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலை அழகாபுரி வரையிலும், சின்னமனூர் சீலையம்பட்டி வழியாக வேப்பம்பட்டி, காமாட்சிபுரம், வெங்கடாசலபுரம் வரை மாநில நெடுஞ்சாலை சின்னமனூர் ஒன்றிய பகுதி வரை இருக்கிறது.
இச்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் விபத்துக்கள் நடக்காத வண்ணம் குறுகிய சாலைகள் அனைத்தும் விரிவாக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சின்னமனூர் ஹைவேவிஸ் தென்பழனி பிரிவிலிருந்து சிவபுரம் சுக்காங்கல்பட்டி வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டு தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பிரிவிலிருந்து சமத்துவபுரம், வேப்பம்பட்டி வழியாக காமாட்சிபுரம் பகுதியில் வெங் கடாசலபுரம் சாலையில் அதிகாரிகள் விரிவாக்கம் சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி சின்னமனூர் வழி வெ ங்கடாச்சலப்புரம் சாலையில் 2024-25ம் ஆண்டு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் செயலாக்கம் செய்யப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகள் தரம் குறித்து கண்காணிப்பு பொறியாளர், நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திருநெல்வேலி முருகேசன் தலைமையில், கோட்டப் பொறியாளர் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் பரமக்குடி செந்தில்குமார் மேற்பார்வையில் தணிக்கை குழுவானது ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் போது தேனி கோட்ட பொறியாளர் சுவாமிநாதன், உத்தமபாளையம் உதவி கோட்ட பொறியாளர் ராஜா, தரக்கட்டுப்பாடு பிரிவு உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரின் சுல்தானா ஆகியோர் உடன் இருந்தனர்.
அழகாபுரி
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பிரிவிலிருந்து அழகாபுரி வரை சுமார் 13 கிமீ தூரத்துக்கு மாநில நெடுங்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட மற்றும் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள பகுதிகளை நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் திருநெல்வேலி முருகேசன் தலைமையில், நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டப் பொறியாளர் பரமக்குடி செந்தில்குமார் மேற்பார்வையில் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது தேனி கோட்ட பொறியாளர் சுவாமிநாதன், உத்தமபாளையம் உதவி கோட்ட பொறியாளர் ராஜா, தரக்கட்டுப்பாடு பிரிவு உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரின் சுல்தானா ஆகியோர் இருந்தனர்.
The post சின்னமனூர் அருகே சாலை விரிவாக்க பணியை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.
