×

போர் நிறுத்தம் குறித்து கிண்டலாக பேசிய அதிமுக மாஜி அமைச்சர் வீடியோ வைரல்

சென்னை:அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா திருவொற்றியூரில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, வைகைச்செல்வன், சின்னையன், முன்னாள் எம்எல்ஏ குப்பன் ஆகியோர் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், ‘எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் என்பதால் தான் இந்திய பாகிஸ்தான் போரே நிறுத்தப்பட்டுள்ளது’ என்றார். இதனை கேட்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வழியே சென்ற பொதுமக்கள் முகம் சுளித்தபடி சென்றனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் பொறுப்பற்ற முறையில் அருவருக்கத்தக்க வகையில் இந்திய பாகிஸ்தான் போர் குறித்து கிண்டல் செய்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post போர் நிறுத்தம் குறித்து கிண்டலாக பேசிய அதிமுக மாஜி அமைச்சர் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Majhi Minister ,Chennai ,H.E. ,Secretary General ,Edapadi Palanichami ,Thiruvotriyur ,Madhavaram Murthy ,Vaikaichelvan ,Sinnaian ,MLA ,Kuppan ,minister ,Supreme Magician ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...