×

திருவரங்குளம் வட்டார பகுதி கோயில்களில் சித்திரை பவுர்ணமி வழிபாடு

புதுக்கோட்டை, மே 13: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டார பகுதியில உள்ள கோயில்களில் சித்திரை மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. திருவரங்குளம் பிரசித்தி பெற்ற அரங்குலநாதர் பெரியநாயகி அம்பாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக செய்யப்பட்டு, அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, மகாதீபம் காட்டப்பட்டது.

மதியம் பக்தர்களுக்க அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், திருவரங்குளம் பிடாரி அம்மன் கோவில், பாரதியார் நகர் புற்றடிமகா சக்தி மாரியம்மன் கோவில் அழகம்பாள்புரம் அழகம்பாள் கோவில், பொற்பனை கோட்டை முனீஸ்வரர் கோவில் இம்பனாபட்டி முத்துமாரியம்மன் கோவில், உள்ளிட்ட இடங்களில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இரவு அரங்குல நாதர் பெரியநாயகி அம்பாள் கோவில் வாசலில் இருந்து கொடி மரம் வரை விளக்கு ஏற்றிபக்தர்கள சிவ சிவ ஹர ஹர கோஷத்துடன் தேரோடும் வீதிகளை சுற்றி வலம் வந்தனர்.

The post திருவரங்குளம் வட்டார பகுதி கோயில்களில் சித்திரை பவுர்ணமி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Chithirai Pournami ,Thiruvarangulam district ,Pudukkottai ,Chithirai month ,Pournami Puja ,Pudukkottai district ,Chithira Pournami ,
× RELATED காந்தி சிலை ரவுண்டானா பகுதியில்...