×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆனக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி அபாரம்

குளச்சல்,மே 13 : குளச்சல் அருகே ஆனக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவி ஷெர்லி ரோஸ் 538 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவி கௌசிகா 533 மதிப்பெண்கள் பெற்று 2 ம் இடமும்,மாணவி ஜென்சி 523 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பெற்றனர். மேலும் மாணவி தன்யா கணிணி அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இப்பள்ளியில் தேர்வு எழுதிய 74 மாணவர்களும் வெற்றிப்பெற்று 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். இம் மாணவர்களை பள்ளி தலைமையாசிரியை விமலா ஸ்டெல்லா பாய், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் குணசிங் வேதநாயகம் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.இப்பள்ளி கடந்த 4 வருடமாக சென்டம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆனக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி அபாரம் appeared first on Dinakaran.

Tags : PLUS 2 PUBLIC ANAKUZHI GOVERNMENT SECONDARY SCHOOL ABARAM ,Kulachal ,Shirley Rose ,Plus 2 General Public School ,Anakuzhi Government Secondary School ,Kausica ,Dinakaran ,
× RELATED காந்தி சிலை ரவுண்டானா பகுதியில்...