×

ஜல்லிக்கற்கள் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

ஓசூர், மே 12: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், வருவாய்த்துறை, கனிம வளத்துறை மற்றும் காவல் துறையினர் கூட்டாக கனிமவளம் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி, அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து ஓசூர் அடுத்த மத்திகிரி பிரிவு சாலை, தனியார் பள்ளி அருகில் ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா தலைமையில் வருவாய் ஆய்வாளர் தர்மன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்த 4 லாரிகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 10 யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்தி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆர்ஐ தர்மன் கொடுத்த புகாரின் பேரில், மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜல்லிக்கற்கள் கடத்தலில் ஈடுபட்ட 4 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும், லாரியின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களை தேடி வருகின்றனர்.

The post ஜல்லிக்கற்கள் கடத்திய 4 லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri District ,Collector ,Dinesh Kumar ,Revenue Department ,Mineral Resources Department ,Police Department ,Hosur… ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரத்தில் ஈப்பு ஓட்டுநர் பணிக்கு நேர்காணல்