கம்பம்: சர்வதேச அளவில் நடைபெற்ற கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஒன்றிய அரசின் விளையாட்டு துறையின் சார்பாக கோவாவில், கடந்த மாதம் சர்வதேச அளவிலான கராத்தே, யோகா, சிலம்பம் போட்டிகள் நடந்தது. இதில் கம்பம் மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவர்கள் இந்தியா சார்பாக மொத்தம் 11 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனர்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளையும், மாநில தலைமை பயிற்சியாளரும், தமிழ்நாடு மாநில கூடுதல் பாடத்திட்ட பயிற்சியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான கியோசி டாக்டர் கராத்தே ராமகிருஷ்ணன் ஆகியோரை நேற்று சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது கம்பம் வடக்கு நகர திமுக செயலாளர் வீரபாண்டியன், தெற்கு நகர் திமுக பொறுப்பாளர் பால்பாண்டி ராஜா மற்றும் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.
The post சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.
