×

திமுக மகளிர் அணி அமைப்பாளர்கள் நியமனம் ஹெலன் டேவிட்சன் அறிவிப்பு

 

நாகர்கோவில்: திமுக மகளிர் அணி ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குமரி மேற்கு மாவட்டத்தில் அமைப்பாளர்களாக தக்கலை வடக்கு ஒன்றியம் ஜெயந்தி, திருவட்டார் வடக்கு பிரமிளா, திருவட்டார் தெற்கு ஜெயா, கிள்ளியூர் வடக்கு வளர்மதி கிறிஸ்டோபர், கிள்ளியூர் தெற்கு கிறிஸ்டல் பபி, மேல்புறம் வடக்கு ரேணு, மேல்புறம் தெற்கு அம்பிகா, முன்சிறை கிழக்கு பரமேஸ்வரி, முன்சிறை மேற்கு கலா ஆகியோரும் ஒன்றியத்திற்கு 5 பேர் வீதம் துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். குழித்துறை நகரத்திற்கு ரெஜினா அலெக்சாண்டர், பத்மநாபபுரம் நகரத்திற்கு அனிதா மற்றும் துணை அமைப்பாளர்கள், பேரூர்களுக்கு துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post திமுக மகளிர் அணி அமைப்பாளர்கள் நியமனம் ஹெலன் டேவிட்சன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Women ,Helen Davidson ,Nagercoil ,DMK Women's Team ,DMK Women's Team Union ,Perur Organizers ,Thakkalai North Union ,Jayanthi ,Thiruvattar ,Kumari West district… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...