- புத்தர்
- நாகர்கோவில் தலைமை
- தபால் அலுவலகம்
- நாகர்கோவில்
- தலைமை அஞ்சல் அலுவலகம்
- ஜெயந்தி
- புத்த ஜெயந்தி
- நாகர்கோவில் தலைமை தபால் நிலையம்
நாகர்கோவில்: புத்த ஜெயந்தியை முன்னிட்டு தபால்நிலையங்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரிய வகை அஞ்சல் தலைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சி வழியாக மாணவர்களிடையே தபால் தலை சேமிப்பின் முக்கியத்துவம், இந்திய பாரம்பரியத்தின் கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த கண்காட்சியில் எஸ்.எம்.ஆர்.வி அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவிகள், அஞ்சல் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக புத்தர் மற்றும் தபால் தலைகள் தொடர்பான விழிப்புணர்வு வினாடிவினா போட்டியும் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு தலைமை தபால் நிலைய மூத்த அஞ்சல் அதிகாரி சுரேஷ் பரிசு வழங்கினார்.
The post நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் புத்தஜெயந்தி அஞ்சல்தலை கண்காட்சி appeared first on Dinakaran.
